உதயநிதியை வைத்து 'சைக்கோ' படத்தை இயக்கிய இயக்குனர் மிஷ்கின், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகை ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2 ' படத்தை இயக்கி வருகிறார். 

உதயநிதியை வைத்து 'சைக்கோ' படத்தை இயக்கிய இயக்குனர் மிஷ்கின், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகை ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2 ' படத்தை இயக்கி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில், கொரோனா பிரச்சனை திடீர் என தலை தூங்கியதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சனை கட்டுக்குள் வந்து விட்டதால், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசாசு 2 படத்தை தயாரிப்பாளர் T.முருகானந்தம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் மிக பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார். 

இதில் ஏற்கனவே 'அவள்' , 'அரண்மனை' ஆகிய இரண்டு திகில் படங்களில் ரசிகர்களை மிரட்டியுள்ள ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் 'சவரக்கத்தி' பட புகழ் நடிகை பூர்ணா பேயாக வந்த மிரட்ட உள்ளார், என கூறப்படுகிறது. இந்த இரண்டு நடிகைகளை தொடர்ந்து மேலும் ஒரு நடிகை 'பிசாசு 2 ' படத்தில் இணைத்துள்ளார்.

நடிகை தமன்னா - ஜிவி குமார் நடிப்பில், ஹாட் ஸ்டார் பிரைமில் கடந்த இரண்டு மாதானலுக்கு முன் வெளியான கிரைம் வெப் சீரீஸில்... தமன்னாவின் தங்கையாக நடித்த, நமீதா கிருஷ்ணமூர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார்.