pilot helped sunny leone in flight
பிரபல பாலிவுட் நடிகையான சன்னிலியோன், தன் கணவர் மற்றும் நண்பர்களுடன் விமானத்தில் வெளிநாட்டிற்கு சென்றார். அப்போது விமானத்தில் பயணித்தபோது விமானம் மகாராஷ்டிரா அருகே நடுவானில் திடீரென நிலை தடுமாறியது.
அதிச்சி அடைந்த பயணிகள் பயத்தில் அலற தொடங்கினர். அனுபவம் வாய்ந்த விமானி என்பதால் சூழலைச் சமாளித்து, விபத்து ஏற்படாமல் விமானத்தைத் தரையிறக்கி, பயணிகளைக் காப்பாற்றினார்.
இதற்கு தொழில்நுட்ப கோளாறும், மோசமான வானிலையும்தான் காரணம் என விமானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நடிகை சன்னிலியோன் செல்பி வீடியோவை ட்வீட் செய்துள்ளார். அதில், மோசமான வானிலை காரணமாக நாங்கள் சென்ற விமானம் நிலைகுலைந்தது எனவும், கடவுள் அருளால் உயிர் பிழைத்துள்ளோம் எனவும், தெரிவித்துள்ளார். கடவுளுக்கும் விமானிக்கும் சன்னிலியோன் மற்றும் அவரது கணவர், நண்பர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
