பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் 'காலர் ஆப் தி வீக்' என ஒருவரை தேர்வு செய்து, அவரை பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொடுள்ள ஒரு ஹவுஸ் மெட்டுடன் பேச அனுமதிப்பார்கள்.

அதே போல் இந்த வாரமும் ஒரு காலர் போன் செய்து பேசுவது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவின் மூலம் தெரிகிறது. ஆனால் இந்த முறை கால் செய்துள்ள நபர், ஹவுஸ் மெட்டுடன் பேச ஆசை படுவதற்கு பதிலாக இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல ஹாசனுடன் பேச விருப்பம் தெருதிவுத்துள்ளார் என தெரிகிறது.

அந்த நபர் கமலிடம் ஒரு கேள்வி கேட்டு சிக்க வைத்துள்ளார். அதாவது "கமல் சார் நீங்க செந்தில் மாதிரி கவுண்டர்மணி கூட இருப்பீர்களா? அல்லது வடிவேல் மாதிரி தனியா இருப்பீர்களா என கேட்டுள்ளார்.

சற்றும் எதிர்பாராத இந்த கேள்வியை கேட்டதுடன், முதலில் தன்னுடைய சிரிப்பை பதிலாக கொடுக்கும் கமல், என்ன பதில் சொல்லுவார் என பொறுத்திருந்து பார்ப்போம்.