பேட்ட மற்றும் விஸ்வாசம் இரண்டில் எது வெற்றி? இரண்டில் எது வசூல் அதிகம் என நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 'பேட்ட' படத்தை விட 'விஸ்வாசம்' படத்தின் வசூல் தான் தமிழகத்தில் அதிகம் என்று டிராக்கர்ஸ் பலரும் ட்வீட் போட்டதால் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள். 

இந்நிலையில்,'பேட்ட' படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் "பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டை ட்ராக் செய்யும் அன்பர்களே, நீங்கள் எப்படி இவ்வளவு உறுதியாக பேட்ட படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் எண்களை கூறுகிறீர்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. ஏன்னா? தமிழகம் முழுவதும்  600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இருந்து எங்களுக்கே அதிகாரபூர்வ தகவல் வரவில்லை. ரசிகர்களே இந்த பொங்கலை உங்கள் விருப்பமான ஹீரோக்களோடு கொண்டாடுங்கள் தவறான சித்தரிப்புகளுக்கு இரையாகிவிடாதீர்கள்" என ட்விட் போட்டது.
 
டிராக்கர்ஸ்க்கு முதல்முறையாக பதிலடி கொடுத்ததை பேட்ட படம் ரிலீஸ் பண்ண தியேட்டர் உரிமையாளர்கள் ரசிகர்கள் பலரும் சன் பிக்சர்ஸ் ரீட்வீட் செய்தது சரி தான் என்று கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், வசூல் நிலவரத்தை வெளியிட்டவர்கள் பலருமே  சன் பிக்சர்ஸ் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அதில், “சர்கார் பட ரிலீஸின் போது எங்களது கருத்துகளை ரீ-ட்வீட் செய்து கொண்டாடினீர்கள். இப்போது மட்டும் என்ன ஆனது” என்று டிவீட் போட்டு பதிலடி கொடுத்துள்ளனர். ஊடகத் துறையிலும், சினிமா துறையிலும் வலம் வரும் சன் குழுமம் இப்படியொரு எதிர்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. பேட்ட படம் பற்றி யூ-டியூப் சேனல்களில் வந்த மோசமான புளு சட்டை விமர்சனத்தையும் டெலீட் செய்தது. முன்பாக 'பேட்ட' படக்குழுவினரின் விளம்பரத்துக்கு 'விஸ்வாசம்' விநியோகஸ்தர்களான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸின்  டிவீட்டால் இப்படியான சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.