பொங்கலை முன்னிட்டு இன்று வெளியான பேட்ட, விஸ்வாசம் மற்றும் NTR ஆகிய திரைப்படங்களை தனது இணையதளத்தில் தமிழ் ராக்கர்ஸ் இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளது.

தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் ரீலீஸ் அன்றே வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியையும், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் எற்படுத்தி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி வெளியான ரஜினியின் 2.O திரைப்படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் அதை இணையதளத்தில் வெளியிட்டது. இதே போன்று எந்தப்படம் வெளியிடப்பட்டாலும் அதை உடனடியாக வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும், அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் இன்று ரீலீஸ் ஆனது.

இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது, இரு தரப்பு ரசிகர்களும் படங்களைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு புதிய திரைப்படங்களையுமே தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் தெலுங்கில் இன்று வெளியான NTR திரைப்படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.