’தல’யை தெறிக்க விட்ட தலைவர்... உலக அளவில் விஸ்வாசம் படத்தை அடிச்சுத் தூக்கிய பேட்ட... ரஜினி பராக்...!

First Published 12, Jan 2019, 10:37 AM IST
petta viswasam first day collection report
Highlights

தமிழகத்தில் அஜித் படம் வசூலை குவித்தாலும், உலக அளவில் உள்ள ரஜினியின் மாஸ் விஸ்வாசம் பட வசூலை பேட்ட பின்னுக்குத் தள்ளி அடிச்சுத்தூக்கியிள்ளது.

தமிழகத்தில் பேட்ட படத்தை தாண்டி அஜித் படம் வசூலை குவித்தாலும், உலக அளவில் உள்ள ரஜினியின் மாஸ் விஸ்வாசம் பட வசூலை பின்னுக்குத் தள்ளி அடிச்சுத்தூக்கியிள்ளது.

பொங்கல் பண்டிக்கைக்கு வெளியான விஸ்வாசம்- பேட்ட படங்களின் மோதல் தமிழகத்தையே பொங்க வைத்து விட்டது. ட்ரெய்லர், பட ரிலீஸ் என மாறி மாறி போட்டி ஏற்பட்டு வந்த நிலையில், இப்போது வசூலில் சர்கரவர்த்தி ரஜியா? அஜித்தா? என பரபரக்கிறது தமிழ் திரையுலகம். தற்போதைய நிலவரப்படி விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து பின்னணியிலான கதையில் நடித்திருப்பதாலும், ரஜினி மீண்டும் தன் பழைய பாணிக்கு திரும்பி இருப்பதாலும் இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆனால், சம அளவில் ரசிகர்களை கொண்ட நட்சத்திரங்கள் மோதிக்கொள்வதால் இருவருமே தங்களது முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கத் தவறி விட்டனர். முதல்நாள் தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகம் வசூல் செய்திருக்கிறது. தமிழகம் தவிர மற்ற இடங்களில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படம் அதிகம் வசூல் செய்திருக்கிறது.

 

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் பேட்ட ரூ. 48 கோடியும், தமிழகத்தில் ரூ.23 கோடியையும் வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் உலக அளவில் ரூ 43 கோடியும் தமிழகத்தில் ரூ.26 கோடியும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் பேட்ட திரைப்படம் ரூ. 5 கோடியே 28 லட்சமும், விஸ்வாசம் படம் 60 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் முதல்நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் பேட்ட மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே கபாலி மற்றும் 2.0 ஆகிய படங்கள் உள்ள நிலையில் அமெரிக்காவில் ரஜினியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. கேரளாவில் பேட்ட படம் ரூ.1.14 கோடியும், விஸ்வாசம் படம் 90 லட்சமும் வசூல் செய்துள்ளது. உள்ளூரில் அஜித், படம் வசூலில் கலக்கினாலும், உலக அளவில் ஒட்டு மொத்த வசூலில் ரஜினி நடித்த பேட்ட படம் விஸ்வாசத்தை அடிச்சுத்தூக்கி உள்ளதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் கூறுகின்றன.  
 

loader