திரைப்படம் வெளியாகும் அன்றோ அதற்கு முன்பாகவோ படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அச்சுறுத்திவரும் தமிழ் ராக்கர்ஸ் பேட்ட படத்தின் பாடலை படக்குழு வெளியிடுவதற்கு முன்பாக தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

2.o படம் வசூல் சாதணை படைத்துள்ளதாக படக்குழுவே அதிகாரபூர்வமாக ஒரு பக்கம் அறிவித்துள்ளது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த படம் குறித்த செய்திகளும் விளம்பரங்களும் அதிகளவில் வந்துகொண்டிருக்கும் போதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பேட்ட படத்தின் விளம்பரப்பணிகளும் வேகமெடுத்துள்ளன. படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் மரண மாஸ் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு இணையதளங்களிலும் மாலை 5.30 மணிக்கு சன் நெக்ஸ்ட் தளத்திலும் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே பாடல் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. 

தமிழ்ராக்கர்ஸின் தொடர் தாக்குதலால் தமிழ்த் திரையுலகம் என்ன மாதிரியான விளைவுகளை இனி வரும்காலங்களில் சந்திக்கும் இதற்கு தீர்வு என்ன என ஒரு பக்கம் விவாதம் கிளம்பியிருக்கிறது. 

இப்படி சினிமா துறையை அச்சுறுத்திவந்த தமிழ்ராக்கர்ஸ் என்ற பிரபல பைரசி வெப்சைட்டின் அட்மின் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பேட்ட சிங்கிள் டிராக் வெளியிட்டது என்ன யாராலயும் அழிக்கவே முடியாது என வார்னிங் கொடுக்கவே இப்படி சேம்பிள்.