சூப்பர் ஸ்டார் நடித்த 'பேட்ட' திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு 10 ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாக உள்ளது. அதே தினத்தில் தல நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாக உள்ளதால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இவ்விரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக, நாளுக்கு நாள் படக்குழுவினர், படங்கள் குறித்து ஏதேனும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 'பேட்ட' படத்தின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் இளமையான துள்ளலோடு சிம்ரனை சுற்றி சுற்றி வரும் காட்சியை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

அந்த வீடியோ இதோ: