சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினம் அன்று வெளியாக உள்ளதால், படக்குழுவினர், அந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்கள் பற்றிய தகவலை வெளியிட்டு படத்தின் மீதான எதிப்பார்ப்பை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்களும் சந்தோஷத்தில் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் 'மரணமாஸ்' பாடல் வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

இதை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பேட்ட படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் 'விஜய்சேதுபதியின்' போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருடைய கேரக்டர் பெயர் 'ஜித்து' என தெரிவித்தனர் படக்குழுவினர்.

Scroll to load tweet…

இதேபோல் நேற்று இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மற்றொரு நடிகரான நவாசுதின் சித்திக், போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 'பேட்ட' படத்தில், அவர் சிங்கார் சிங்' என்ற கேரக்டரில் வருகிறார் என்று அறிவித்துள்ளனர்.

'பேட்ட' படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் "ஊலல்லா" பாடல் நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 

Scroll to load tweet…