சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் திருநாள் அன்று  உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெகுவிரைவில் வெளியிட சன்பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.