சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று தற்போது வரை 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து,  பல திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினி ரசிகர்களும், இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள  பாடல்களும் ரசிகர்களால் அதிக அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.   

இந்த படத்தில், அஜித், விஜய், கமல், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்காமல் இருந்த திரிஷா - சிம்ரன் ஆகிய இருவருமே இந்த படத்தில், ஜோடியாக நடித்து தங்களுடைய பல ஆண்டு கனவை நிஜமாக்கி கொண்டனர்.

தற்போது இந்த படம் வெளியாகி, இன்றுடன் 50வது, நாள் நிறைவு பெற்றுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வருகின்றனர். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் என அனைவருடனும் இணைந்து , கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

இன்று காலை, ரஜினி ரசிகர்கள் கொண்டாடிய 50 வது நாள் வெற்றி விழாவில் லதா ரஜினிகாந்த், கலந்து கொண்டு ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியது மட்டும் இன்றி ஒரு குழந்தைக்கு பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.