தமிழில் வெளியாகும் அதே தேதியில் ‘பேட்ட’ தெலுங்கு டப்பிங் படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததால் தியேட்டர்கள் எதுவும் கிடைக்காமல் தெலுங்குப் பட விநியோகஸ்தர் திணறி வருவதாக தகவல்கள் வருகின்றன.

ஆந்திரா, தெலங்கானா  மாநிலங்களிலும் ரஜினியின் ‘பேட்ட’ படம் அதே தேதியில்  ரிலீஸாகிறது. படத்தை கே.வி.எஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் கே.சுதாகர் வெளியிடுகிறார். நமக்கு பொங்கல் எவ்வளவு முக்கியமான பண்டிகையோ அந்த அளவுக்கு ஆந்திர மக்களுக்கு சங்கராந்தி. இந்த சங்கராந்தியை ஒட்டி ஆந்திரா. தெலங்கானாவில் ‘என்.டி. ஆர் கதாநாயகடு’,ராம் சரணின் ‘விதய விநய ராமா’வருண் தேஜின் ‘எஃப் 2’ ஆகிய முக்கியமான மூன்று படங்கள் ரிலீஸாகின்றன.

இந்த மூன்று படங்களுக்கும் தியேட்டர்கள் போட்ட பிறகுதான் ‘பேட்ட’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கும் என்கிற நிலையில் ரஜினி படத்தின் விநியோகஸ்தர் எவ்வளவோ முயன்றும் மிகவும் சொற்பமான தியேட்டர்களே கிடைத்துள்ளனவாம்.

ஆனால் இதற்கு நேரெதிராக கர்நாடக மாநிலத்தில் ஒரு நேரடிப்படம் ரிலீஸாகிற அளவுக்கு 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறதாம் ‘பேட்ட்’.