பட ரிலீசுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், பாடல்கள், டீஸர், கதாபாத்திரங்களின் போஸ்டர்  அடுத்தடுத்து வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளனர்.  தலைவர் ஐஸ் பேக் என்று பெரும் உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் எந்த மாதிரியான கட்டியாக இருக்கும் என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.

காலா படத்திற்குப் பின் நடித்திருக்கும் பேட்ட படத்தின்  படப்பிடிப்பு வட இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் நடந்தது. இந்த படத்தில் ரஜினி ஒரு ஹாஸ்டல் போன்று தெரிகிறாரே.  இந்த படத்தின் போஸ்டர்கள் பாட்சா படத்தில் வரும் ரஜினியை போல, டான் லுக்கில் செம்ம மாஸாக இருக்கிறார்.  

கதைப்படி, மதுரையில் நடக்கும் கதை என்றும், கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இதை உறுதிபடுத்துவதுபோல் வட இந்தியாவில் கல்லூரிகளில் படப்பிடிப்புகளை நடத்தினர். இமயமலை அடிவாரத்தில் படப்பிடிப்புகள் நடந்ததாலும் போலீஸ் வாகனத்தில் ரஜினிகாந்த் செல்வதுபோல் புகைப்படம் வெளியானதாலும் இது பயங்கரவாதிகளுடன் நடக்கும் மோதல் கதை என்று சொன்னார்கள்.

ஆனால், பேட்ட படம் ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. கல்லூரி விடுதி வார்டன் ஆணவக் கொலையை எதிர்த்து போராடுகிறார். தமிழகத்தில் உடுமலைப்பேட்டை சங்கர்  கொலையைப்போல, நாட்டில் இதுவரை 80-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளது. ரஜினிகாந்த் கல்லூரி வார்டன் என்பதால் அங்கு நடக்கும் காதல் மற்றும் கொலையை பற்றி கதை நகரும் என சொல்லப்படுகிறது,  இதை மையமாக வைத்து கதை இருக்கும் என வைரலாகிறது.