சமீப காலமாக தமிழில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் ஐரோப்பா கண்டத்தின் உலக புகழ் பெற்ற மிகப்பெரிய திரையரங்கமான ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்படுவது வழக்கமாகி வருகிறது. 

அந்த வகையில் முதல் முதலில் போடப்பட்டது ரஜினியின் கபாலி', படம் தான். அதை தொடர்ந்து காலா', 2.0', விஜய்யின் 'மெர்சல்', 'சர்கார்' உள்பட ஒருசில படங்கள் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியிலும் இத்தகைய படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளதால்,  பாரீஸ் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் யாருடைய திரைப்படம் திரையிடப்படும் என மிகப்பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. 

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் இந்த திரையரங்கில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும், போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகிறார்கள்.