Asianet News TamilAsianet News Tamil

சிம்பன்சிக்கு நடந்த சித்திரவதை...ஜீவாவின் ‘கொரில்லா’படம் ரிலீஸாகாது?...

சிம்பன்சி குரங்கு ஒன்றுடன் நடிகர் ஜீவா இணைந்து நடித்த ‘கொரில்லா’படம் திரைக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு இப்பட ரிலீசுக்கு குறுக்கே பெரும் பாறை ஒன்றைத் தூக்கிவைத்துள்ளது.

peta warns the movie gorilla
Author
Chennai, First Published Jun 20, 2019, 12:52 PM IST

சிம்பன்சி குரங்கு ஒன்றுடன் நடிகர் ஜீவா இணைந்து நடித்த ‘கொரில்லா’படம் திரைக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு இப்பட ரிலீசுக்கு குறுக்கே பெரும் பாறை ஒன்றைத் தூக்கிவைத்துள்ளது.peta warns the movie gorilla

ஜீவா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் 'கொரில்லா', இதில் 'காங்' என்னும் கதாபாத்திரத்தில் சிம்பான்சி குரங்கு ஒன்று நடித்துள்ளது. டான் சாண்டி இயக்கும் இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். சதீஷ், ராதாரவி, யோகி பாபு போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். 

பெரும்பொருட்செலவில் தயாராகி ரிலீஸை நோக்கிக் காத்திருக்கும் இப்படத்தில் இந்த சிம்பன்சிக்கு மட்டும் தினம் ஒன்றுக்கு ரூ 2 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைத்ததற்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிஜ சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்றும் பீட்டா இந்தியா அமைப்பு படக்குழுவினரை அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிகிறது.peta warns the movie gorilla

தனது எதிர்ப்புக்காக காரணங்களை தங்களது அதிகாரபூர்வமான வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பீட்டா அமைப்பு,...கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுகின்ற விலங்குகள் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆக்ரோஷமாகின்றன. விலங்குகளைத் திரைப்படங்களில் பயன்படுத்துவது தேவையற்றது. இதன் காரணமாக விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு எப்போதும் இருக்கும் என பீட்டா அமைப்பு பட்டியலிட்டுக் கூறியுள்ளது. உயிருடன் இருக்கும் விலங்குகளைப் பயன்படுத்துவது தேவையில்லாதது. மாபெரும் வெற்றிப் படங்களான ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ போன்றவற்றில் நிஜ விலங்குகளைப் பயன்படுத்தாமல் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்தினார்கள். சிம்பன்சி குரங்குகளைத் தவறாகச் சித்திரிப்பது அவற்றின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’கொரில்லா’படத்தை பீட்டா அமைப்பு இவ்வளவு மூர்க்கமாக எதிர்த்திருக்கும் நிலையில் அப்பட ரிலீஸ் அவ்வளவு எளிதில் நடக்காது என்று தெரிகிறது. ஏனெனில் இந்த பீட்டா அமைப்பு ஒரு சிம்பன்சிக்குக் காட்டும் சிம்பதியை தயாரிப்பாளர்கள் மீது காட்ட முன்வருவதே இல்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios