Permission to enter Padmanabhan Swamy Temple - Yesudas request ...

புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகரும், பின்னணிப் பாடகருமான யேசுதாஸ், மிகவும் பழமை வாய்ந்த பத்மநாபன் சுவாமி கோவிலில் நுழைய அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

யேசுதாஸின் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர். தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் யேசுதாஸே பத்மநாபன் கோவிலிற்கு வருகை புரிவதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு செல்வதை வழக்கமாக கொண்டவர். கடந்த 56 ஆண்டுகாலமாக பல்வேறு மொழிகளில் பின்னணிப் பாடகராக உள்ளார்.

இதுதொடர்பாக பத்மநாப ஸ்வாமி கோவில் நிர்வாகம், “பிறப்பால் கிறிஸ்துவரான யேசுதாஸ், இந்து சமயத்தின் மீதான ஈடுபாட்டை முன்மொழிந்து சிறப்பு அனுமதி கேட்டுள்ளார். எந்த ஒரு குறிப்பிட்ட தேதியையும் யேசுதாஸ் குறிப்பிடவில்லை.

இந்து சமயத்தின் மீதான நம்பிக்கை கொண்ட எவரும், கோவிலிற்கு வருகை புரியலாம் என்றும், அதற்கு எந்தவித தடைகளும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இதுபோன்ற உறுதி மொழி அளிக்கப்பட்டால் மட்டுமே இந்துக்கள் அல்லாதவர்களும், வெளிநாட்டவர்களும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் அனுமதிக்கப்படுவர் என்பது கொசுறு தகவல்.