சமீபத்தில் தமிழில் துவங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பேரழகி'. கருப்பாக பிறப்பதால் இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் ஒரு பெண்ணை புறக்கணிக்கிறார்கள். திருமணம் செய்துக்கொள்ளும் வரும் மாப்பிள்ளைகளால் எப்படி அந்த பெண் அசிகப்படுத்தப் படுகிறாள்... இதையெல்லாம் தாண்டி சமூகத்தில் அவள் எப்படி ஜெயிக்கிறால் என்பதை கருவாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் கருமையான நிறம் கொண்ட பெண்ணாக நடித்து வருபவர் காயத்ரி ராஜ், இவருக்கு சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உண்டாம். இவர் ஹீரோயின் தோழியாக நடிகர் சந்தானம் நடித்து வெளியான திரைப்படம் 'இனிமே இப்படிதான்'. 

இந்த படத்தை தொடந்து இவருக்கு மற்ற படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்காததால் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடினார். அப்போதுதான் 'பேரழகி' சீரியலில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், சென்னை Womens கல்லூரியில் படித்தவராம். இவருடைய அப்பா பைனாஸ் பிஸினெஸ் செய்து வருகிறாராம். அம்மா ஹவுஸ் பைவ் தானாம். 

சினிமா பட ஆசையில் வெள்ளித்திரையில் நுழைந்த இவர், தற்போது சின்னத்திரை மூலம் பிரபலமாகி மீண்டும் வெள்ளித்திரையில் நுழைவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவருக்கு ஏசியா நெட்டின் வாழ்த்துக்கள்.