இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சிம்புவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், பத்து தல படக்குழு அவரது ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுத்துள்ளது.

பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தன் தந்தையைப் போலவே தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த சிம்புவுக்கு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத்தந்தது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள சிம்பு, தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.

இதில் ‘பத்து தல’ படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் சிம்புவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் அவரின் பிறந்தநாளுக்காக பத்து தல படக்குழு டபுள் டிரீட் கொடுத்துள்ளது. அதில் ஒன்று பத்து தல படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர், அதன்படி இப்படத்தில் அவர் AGR என்கிற கேங்ஸ்டர் ரோலில் நடித்துள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். மற்றொன்று கிளிம்ப்ஸ் வீடியோ, இந்த இரண்டுமே வேறலெவலில் இருந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

YouTube video player