பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சாண்டி அவர்கள் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் அவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்று 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து முதல் Runner Upஆக வெற்றி பெற்றவர் தான் சாண்டி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே பல தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி. 

அவர் ஒரு சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து வந்த நிலையில் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றார். ஆனால் அதற்கு முன்பு அவருக்கு இருந்த புகழ், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேறு ஒரு பரிமாணத்திற்கு சென்றது என்றே கூறலாம். அன்று தொடங்கி இன்றுவரை பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார் சாண்டி. 

Scroll to load tweet…

மேலும் அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்து அனைவரையும் வெகுவாக ஈர்த்திருக்கிறார் என்றே கூறலாம். நடிப்பு, நடன இயக்கம் என்பது ஒரு புறம் இருக்க, சாண்டி மாஸ்டர் அவ்வப்போது சில மியூசிக் ஆல்பங்களை இயக்கி, நடித்து வெளியிட்டு வருகிறார். 

Scroll to load tweet…

அந்த வகையில் பாஸ்ட் ஐஸ் பாஸ்ட் என்கின்ற தலைப்பில் வைசாக் என்பவருடைய இசையில் ஒரு புதிய மியூசிக் வீடியோவை உருவாக்கியுள்ளார் அவர். கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வெளியான இந்த மியூசிக் வீடியோவில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு சிறிய கேமியோ செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leo Box Office: 'லியோ' இன்னும் 500 கோடியை தொடவே இல்லை! வசூலில் பங்கமாக அடிவாங்கியதை அறிவித்த தயாரிப்பாளர்!