மலையாளத்தில் நடிகை பார்வதி, தற்போது 'உயரே' என்ற படத்தில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட விமான பைலட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பார்வதி பேட்டி ஒன்றில் கூறுகையில்.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளேன். அதற்கான மேக்கப் போட்ட போது, பலர் என்னுடைய முகத்தை பார்த்து பேசமுடியாமல், தயங்கி தலையை கவிழ்ந்தபடி தான் பேசினர்.

சகஜமாக சிறிது பேசும் சிலர் கூட,  தன்னை பார்த்து பேச விருப்பம் இல்லாமல் இப்படி நடந்து கொண்டனர்.   மேலும் இதுபோன்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மனிதர்களை சாரதான மனிதர்கள் இப்படி நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக பார்வதி தெரிவித்துள்ளார்.