இப்படிப்பட்ட படத்தை இனிமே எடுப்பியான்னு என் புத்தியை, ஒத்தச் செருப்பு பத்தாது, ரெண்டு செருப்பால அடிக்கணும் என விரக்தியுடன் ஒரு ட்விட் போட்டுள்ளார் நடிகர் பார்த்திபன். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பார்த்திபன் இயக்கத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருக்கும்’ஒத்தச் செருப்பு’ கடந்த 20ம் தேதியன்று ரிலீஸாகி சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் வஞ்சகமில்லாமல் இப்படத்தை பாராட்டித் தள்ளினாலும் தியேட்டரில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை என்பதைப் பார்த்திபனே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக நேற்று தியேட்டர் அதிபர்களுக்கு வைத்த வேண்டுகோள் ஒன்றில்,’கூட்டம் குறைவாக இருக்கிறதே என்று படத்தைத் தூக்கிவிடாமல் இன்னும் ஒரு வாரம் காத்திருங்கள்’என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை நேற்று முன் தினம் வழக்கம்போல் தமிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். அதைப் பார்த்துப்பொங்கிய பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்,...# OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும்,பார்ப்பதும்
அருவருப்பான செயல்!ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு!Theatre-ல் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது. அப்பதிவுக்குக் கீழே அவரது ரசிகர்கள் பார்த்திபனுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.