’டப்பிங் படங்களை ஒரிஜினல் படங்கள் போல் ஏமாற்றி வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் இனியாவது நிறுத்தவேண்டும்’ என தயாரிப்பாளரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஒத்தச் செருப்பு’என்ற படத்தை இயக்கி நடித்து மிக விரவில் பார்த்திபன் வெளியிட உள்ள நிலையில், ’கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆஃப் தீனா’ என்ற பெயரில் பார்த்திபன் நடித்த நேரடிப் படம் போல் ஒன்று இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மொழி மாற்றுப்படம் என்று விளம்பரம் செய்யுங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் எனது நேரடிப்படமான ‘ஒத்தச் செருப்பு’பட வியாபாரத்தைப் பாதிக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டும் கன்னடத் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாததால் தயாரிப்பாளர் சங்கத்தில் பார்த்திபன் புகார் அளித்தார். அடுத்தே அது டப்பிங் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

இன்று இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,...கன்னட மொழியில்(7 நாட்கள் கௌரவ வேடத்தில்)நடித்தது! மொழி மாற்றம்(என் குரலில் அல்ல)செய்து தமிழ் படம் போல் வெளியிடுகிறார்கள்."இது ஒரு மொழி மாற்றுப் படம்"என விளம்பரப் படுத்த நிர்பந்தித்த  தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி.அசல் தரத்தில் எடுக்கப் படமென  ரசிகர்களை ஏமாற்றக் கூடாது! என்று பதிவிட்டிருக்கிறார் அவர்.