parthiban seetha taken a snap with daughters marriage
நடிகர் பார்த்திபனின் இரண்டாவது மகள்கீர்த்தனாவிற்கும்,அவருடைய காதலர் அக்ஷய் என்பவருக்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
கீர்த்தனாவின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட,கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கீர்த்தனா இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிந்து வாழ்ந்து வந்த பார்த்திபன் மற்றும் சீதா தன் மகள் திருமணத்திற்காக பேசி, பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இன்று நடந்த மகள் திருமணத்தில் பார்த்திபன் மற்றும் சீதா ஒரே மேடையில், மகள் மாப்பிள்ளை உடன்போஸ் கொடுத்த காட்சி,காண்போரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக பிரிந்து வாழந்து வந்தவர்கள் மகள் திருமணத்தில் ஒன்றாக மேடையில் தோன்றி உள்ளனர்
