உலகிலேயே முதல் முறையாக, 'ஒத்த செருப்பு சைஸ் 9 '  என்கிற படத்தை நடிகர் பார்த்திபன், இயக்கி, தயாரித்து, அவர் மட்டுமே நடித்துள்ளார்.

மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பலர் இந்த படம் வெற்றியடைய பார்த்திபனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், படம் சென்சார் அதிகாரிகரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் ... 'குவி ஆடி போட்டுக்கொண்டு பார்த்தும், நிறையன்றி வேறின்றி, பாராட்டி, 'யூ' கொடுத்த சென்சாருக்கு எனது நன்றி என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அதில் ஐ லவ் யு என பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.