parthiban meet wife seetha for daugther keetrthana wife

பார்த்திபன் - சீதா

நடிகர் பார்த்திபன் ஹீரோவாக நடித்த முதல் படத்தில் நடித்த கதாநாயகியான சீதாவையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். பல வருடம் ஒன்றாக வாழ்ந்த இந்த நட்சத்திர ஜோடிகளுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இருவரும் பரஸ்பரமாக தங்களுக்குள் இருந்த கணவன் மனைவி என்கிற உறவை முறித்துக்கொண்டனர் 

மறுமணம் செய்துக்கொண்ட சீதா:

நடிகர் பார்த்திபனை விட்டு பிரிந்த சீதா, சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது இவருடன் பணியாற்றிய சுரேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது நடிகர் பார்த்திபனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டாலும், மகன் மற்றும் மகளை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதாவின் மகள் கீர்த்தனா:

தற்போது இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கும் சீதா மற்றும் பார்த்திபனின் இரண்டாவது மகள் கீர்த்தனாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், அதனை மறுத்து விட்டு கேமராவின் முன் நிற்க தனக்கு இஷ்டம் இல்லை என தெளிவாக கூறிவிட்டார். இவர் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தனா திருமணம்:

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார். மார்ச் மாதம் 8ம் தேதி இவருடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது என கூறப்படுகிறது. ஏற்கனவே பார்த்திபன் கோலிவுட் முன்னணி நடிகர்கள் ஆன ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோருக்கு பத்திரிக்கைகள் வைத்து விட்டதாகவும், தொடர்ந்து பத்திரிக்கை வைக்கும் வேலையில் பிஸியாக இருந்து வருகிறார்.

சீதாவை சந்தித்த பார்த்திபன்:

சீதாவிடம் இருந்து பிரிந்து தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் பார்த்திபன், தன்னுடைய இரண்டாவது மகள் கீர்த்தனாவின் திருமணத்திற்காக பல வருடங்கள் கழித்து தற்போது பிரிந்து சென்ற மனைவியை சந்தித்ததாகவும், இவர்கள் இருவரும் சில மணிநேரம் மனம் விட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.