Asianet News TamilAsianet News Tamil

oththa seruppu :இசைப்புயலை தொடர்ந்து இசைஞானி உடன் கூட்டணி.. 23 ஆண்டுகளுக்கு பின் இணைந்த பார்த்திபன் - இளையராஜா

இயக்குனர் பார்த்திபன், தற்போது ஒத்த செருப்பு படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அபிஷேக் பச்சன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 

Parthiban confirms Ilaiyaraaja will be a part of oththa seruppu hindi remake
Author
Tamil Nadu, First Published Feb 9, 2022, 10:00 AM IST

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் மட்டுமே இயக்கி, தயாரித்து, நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.  

Parthiban confirms Ilaiyaraaja will be a part of oththa seruppu hindi remake

ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது, அதே போல்... சிறந்த படமாக தேசிய விருதையும் பெற்றது. தற்போது இயக்குனர் பார்த்திபன், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அபிஷேக் பச்சன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதன்படி ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கிற்கு இளையராஜா இசையமைத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ஹவுஸ்புல் படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

Parthiban confirms Ilaiyaraaja will be a part of oththa seruppu hindi remake

அப்படத்தின் பின்னணி இசை பணிகளின் போது எடுத்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பார்த்திபன், அந்த பதிவில், ஹிந்தியின் பின்னணி இசை கோர்ப்பில். மறுபுறம் ARR-ரின் இசையில் ’இரவின் நிழல்’. இசைபட வாழ்தல் அர்த்தப்பட.. புகழ் விற்று பொருள் ஈட்டாமல், இன்னும் பெற உழைப்பதன் பெருமை காண்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் Oscar nominationsல் இடம்பெற்ற கலைஞர்களுக்கு பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios