நேற்று வெளியான ‘அயோக்யா’ படம் தனது ‘உள்ளே வெளியே’ படத்தைத் திருடியது என்பது கூட தெரியாமல் அதில் நானே நடித்திருக்கிறேன்’ என்று பரிதாபமாக ட்விட் போட்ட இயக்குநர் பார்த்திபன் விஜய் நடித்த ‘ஜில்லா’ படம் கூட அதே ‘உள்ளே வெளியே’ படத்தின் உல்டாதான் என்பதை ஒத்துக்கொண்டிருக்கிறார்.

இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அயோக்யா படத்தின் கதைத்திருட்டு குறித்துப் பதிவிட்ட இரா. பார்த்திபன்,...'அயோக்கியா'த்தனம்!
94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

அப்பதிவுக்கு பார்த்திபனுக்கு ‘இதுக்கு உள்ளே வெளியே பார்ட் 2 னு நீங்களே எடுத்து௫க்கலாம்' என  ஆதரவாகவும், ‘இதுவும் பார்த்திபனின் பண்பட்ட நடிப்பு தான்..வாங்கின காசுக்கு படத்தை ஓட வைக்கும் தந்திரமே இது..  என எதிராகவும் கமெண்டுகள் குவிந்து வரும் நிலையில் ஒரு ரசிகர் ..உண்மையில விஜய் நடிச்ச ‘ஜில்லா’ படம் கூட ‘உள்ளே வெளியே’ படத்தோட காப்பிதான். நிறைய வசனங்கள் உட்பட’ என்று கமெண்ட் போட அதற்கு பதிலளித்த பார்த்திபன் ,...எப்படியோ கல்லா ஃபுல்லா ஆனா சரிதான்’ என்று அதை ஆமோதித்து பதில் போட்டிருக்கிறார்.