’94ல் வெளியான எனது ‘உள்ளே வெளியே’ படத்தை அப்படியே சுட்டுப்படமாக்கி அதில் என்னையும் நடிக்க வைத்து சீட்டிங் செய்திருக்கிறார்கள் ‘அயோக்யா’ படத்தின் இயக்குநரும் நடிகர் விஷாலும் என்று அதிர்ச்சிகரமான ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் இயக்குநர் பார்த்திபன்.

நேற்று வெளியான விஷாலின் ‘அயோக்யா’ படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்திருக்கிறார். ’டெம்பர்’ என்ற பெயரில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் 2015ல் வெளியாகி ஹிட்டடித்த இப்படத்தை தமிழில் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் தெலுங்கு ஒரிஜினலை நேற்று வரை பார்த்திராத பார்த்திபனுக்கு அயோக்யாவைப் பார்த்தவுடன் பேரதிர்ச்சி. ‘அடப்பாவிகளா கூடவே இருந்து குழி பற்க்கிறதுங்குறதுங்கிறது இதுதானா’ என்று மைண்ட் வாய்சில் புலம்பியிருக்கும் அவர் தனது வயிற்றெரிச்சலை ட்விட்டர் பதிவில் அப்படியே குமுறித் தீர்த்துவிட்டார்.

அந்தப் பதிவில்,...'அயோக்கியா'த்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்...என குமுறியிருக்கிறார்.

சில காலமாக தொட்டது எல்லாம் கெட்டது என்று ஆகிக்கொண்டிருக்கும் விஷாலுக்கு இது இன்னொரு அசிங்கம்.