தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் இயக்கி, தயாரித்து, அவர் மட்டுமே நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.  ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது, அதே போல்... சிறந்த படமாக தேசிய விருதையும் பெற்றது. தொடர்ந்து பல்வேறு விருதுகளை இப்படம் குவித்த நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில், பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் கடத்த சில மாதங்களுக்கு முன் அதிகார பூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கான ப்ரீ - புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது. இதை தொடர்ந்து பலர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட் மற்றும் இன்றி இந்த படத்தை ஹோலிவுட்டில் படமாக்கவும் பார்த்திபன் முயற்சி செய்து வந்த நிலையில், விரைவில் ஹோலிவுட்டிலும் இந்த படம் ரீமேக் செய்யப்படும் என கூறப்படுகிறது.