தமிழகத்தின் பெருநகரங்களில் இயங்கி வரும் பிரமாண்ட மால்களில் பார்கிங் கட்டணமாக ஒரு மணிநேரத்திற்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது நடைபெற்று வரும், திரையுலகினர் வேலை நிறுத்தத்தில் கூட மால்கள் மற்றும் திரையரங்குகளில் பார்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுள்ளது. 

இந்நிலையில் தெலுங்கானாவில் அதிரடியாக மால்களில் இனி பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில்.... தெலுங்கானாவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பார்க்கிங் கட்டணங்களை வரையரப்படுத்தி நீக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி வரும் ஏப்ரல் மாதம் முதல் தெலுங்கானாவில் உள்ள மால்களில் முதல் அரை மணி நேரத்துக்கு எந்த வாகனத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அரை மணி நேரத்திற்கு மேல் ஒரு மணி நேரம் வரை வாகன உரிமையாளர் அந்த மாலில் ஏதேனும் பொருள் வாங்கியதற்கான பில்லை காண்பித்தால் பார்கிங்க கட்டணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அந்த வாகனம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், அந்த வாகனம் நிறுத்திவைக்கும் கட்டணத்தை விட அதிக மதிப்பிற்கு பொருட்கள் வாங்கி இருந்தால் கட்டணம் கிடையாது என்றும் இதில் திரையரங்கு டிக்கெட் கட்டணமும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து தெலுங்கானா மாநிலம் முழுவதும் அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டணம் வரையறுக்கப் பட்டுள்ளதால் மால்களில் வாங்கும் நடுத்தர குடும்பத்தினர் மகழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதே போல் தமிழகத்தில் நிறைய மால்களுடன் இயக்கம் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இதுபோன்ற திட்டத்தை கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.