இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் படத்தில், கருப்பி என்ற பெயரில் நாய் ஒன்று நடித்திருந்தது.  ஒரு சில காட்சிகளில் மட்டுமே இந்த நாய் வந்தாலும், அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டது. குறிப்பாக 'கருப்பியை' நோக்கி ரயில் வரும்போது, படம் பார்ப்பவர்கள் அனைவரும் கருப்பியை நினைத்து உனைச்சிவசப்பட்டனர்.

கடந்த வருடத்தில் இறுதியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று,  நல்ல கதை கொண்ட சிறிய பட்ஜெட் படம் என பாராட்டப்பட்டது. இதில் நடிகர் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர். 

இந்நிலையில் இந்த படத்தில், ' கருப்பி' யாக நடித்த நாய்க்கு, மிகப்பெரிய ஜாக்பார்ட் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.  புதுமுகங்கள் நடிப்பில் உருவாக்கும் 'ஆத்தா' என்ற படத்தில் கருப்பி தான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறதாம். கிட்ட தட்ட இது தான் ஹீரோ என்றே கூறப்படுகிறது.

புதுமுகங்களுடன் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.