யூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் பரிதாபங்கள் என்கிற, காமெடி  நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர்.  இவர்கள் தற்போது, பரிதாபங்கள் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், திரைப்படம் ஒன்றை தயாரித்து நடிக்க உள்ளனர்.

ஏற்கனவே இந்த படம் குறித்த அறிவித்துள்ள அவர்கள், தற்போது இந்த படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 

காமெடியில் என்றும் அடித்துக் கொள்ள முடியாத கிங்காக இருக்கும் வைகைப்புயல் வடிவேலுவின் டயலாக்கையே இந்த படத்திற்கு தலைப்பாக சூட்டியுள்ளனர். 'மனதை திருடிவிட்டாய்' படத்தில் நடிகர் வடிவேலு ஹே மணி கம் டுடே கம் டுமாரோ யா... என சொல்லும் அந்த டயலாக் தான் இந்த படத்தில் படத்தின் டைட்டில்.

யாரும் எதிர்பார்த்திராத தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் சுதாகர் மற்றும் கோபி இருவருமே கதாநாயகனாக நடிக்கின்றனர். இந்த படத்தை எஸ்.ஏ.கே  இயக்கவுள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, நிஜாய் ஒளிப்பதிவு செய்கிறார்.  விரைவில் இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது