’இந்தித் திணிப்புக்கெல்லாம் பயப்படாதீங்க. நம்ம இளையராஜா போட்ட நாலு பாட்டுக்கே ஊரைவிட்டு ஓடிப்போன பயலுகதான அவனுக?’என்று ராஜாவின் ரசிகர்கள் அவரது  பிறந்தநாள் பதிவுகளில் போட்டுவரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது தமிழ்ப் பாசத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘மரியான்’.2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படம் படுதோல்வி அடைந்தது எனினும் அவருடைய இசையில் கபிலன் எழுதிய , ’இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன என்கிற பாடல் பெரும் வெற்றி பெற்றது.

அந்தப்பாடலை பஞ்சாபின் புகழ்பெற்ற பாடகர் ஜஸ்தீப் ஜோகி, தமிழில் பாடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.அதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ..பஞ்சாபில் பரவுகிறது தமிழ்... என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

அதற்கு தமிழ் இயல்பாக இந்தியா முழுக்க பரவுகிறது. ஆனால் இந்தியை வலுக்கட்டாயமாக நம் மேல் திணிக்கிறார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.