panchimittai movie release issuee
இயக்குனர் எஸ்.பி. மோகன் இயக்கத்தில், தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் கதாநாயகனாகவும், நிக்கிலா விமல் நாயகியாகவும் நடித்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் ‘பஞ்சு மிட்டாய்’.
‘கலர்று’ குறும்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ‘தீபம் சினிமாஸ்’ தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டி .இமான் இசையமைத்துள்ளார். இந்த மாதம் இறுதியில் இந்த படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதனால் தயாரிப்பு நிறுவனம் சார்பில், திரைப்படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவந்தனர்.
இந்நிலையில், திடீர் என செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் சங்க கட்டபஞ்சாயத்து காரணமாக "பஞ்சு மிட்டாய்" திரைப்படம் ரீலீஸ் நிறுத்தப்பட்டது.
.jpg)
இதனால் தயாரிப்பாளருக்கு இதுவரை விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட தொகை நஷ்டம் ஏற்பட்டதுடன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தயாரிப்பாளருடன் இணைந்து பத்திரிகையாளர்களை ஞானவேல்ராஜா இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
