Asianet News TamilAsianet News Tamil

விக்ரம் புரமோஷனுக்காக பஞ்சதந்திரம் கேங்கை களமிறக்கிய கமல்... ஆண்டவரே வேறலெவல் என பாராட்டும் நெட்டிசன்கள்

Vikram Promo :  பஞ்ச தந்திரம் படத்தில் நடித்த ஸ்ரீமன், ஜெயராம், யூகி சேது, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் விக்ரம் கமலைப் பற்றி போனில் கலந்துரையாடும் படி நக்கல் நையாண்டியுடன் கூடிய புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

panchatanthiram stars reunite for kamalhaasan's vikram movie promotion
Author
Tamil Nadu, First Published May 28, 2022, 9:14 AM IST

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சூர்யா, நரேன், பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்டனி வர்கீஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவு பணியாற்றி உள்ளனர். மேலும் கிரீஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

panchatanthiram stars reunite for kamalhaasan's vikram movie promotion

தமிழில் உருவாகி உள்ள இப்படம் கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், விக்ரம் படத்தை புரமோட் செய்வதற்காக பஞ்ச தந்திரம் கேங்கை களமிறக்கி உள்ளார் கமல். பஞ்ச தந்திரம் படத்தில் நடித்த ஸ்ரீமன், ஜெயராம், யூகி சேது, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் விக்ரம் கமலைப் பற்றி போனில் கலந்துரையாடும் படி நக்கல் நையாண்டியுடன் கூடிய அந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் புரோமோ வேறலெவலில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... விக்கி - நயனின் கல்யாண பத்திரிக்கை லீக்கானது - திருமணம் திருப்பதியில் இல்லையாம்... இந்த இடத்தில் தானாம்

Follow Us:
Download App:
  • android
  • ios