Palli Paruvathilea Movie Audio Launch

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம் “பள்ளிப்பருவத்திலே“. இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர் 'கற்றது தமிழ்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். பொன்வண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தன், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி, காதல் சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கஸ்தூரி ராஜா இந்தத் திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை மற்றும் துள்ளுவதோ இளமை படத்தை கலந்து செய்த கலவையாக வந்துள்ளது எனக் கூறினார்.

நடிகர் நாசர் பேசுகையில் ஒரு படத்தை ரிலீஸ் செய்வது 10 குழந்தைகளை ஒரு பிரசவத்தில் பிரசவிக்கும் வலிக்கு சமமானது என கூறினார். அவர்கள் பேசிய காட்சிகள் இதோ...