painther sambath special story
கைவண்ணத்தில் தங்களுடைய திறமையை நிரூபிக்கும் திறன் பலருக்கு கிடைப்பதில்லை , அப்படி கிடைத்தாலும் ஒரு சிலர் மட்டுமே போராடி தங்களுடைய விருப்பத்திற்கேற்ற படிப்பை தேர்தெடுத்து படித்து மனதிற்கு பிடித்த வேலையை செய்து வருகின்றனர்.
அப்படி சாதாரணமாக ஒரு படம் வரைபவரை பார்த்து, ஓவியம் வரைவதை தன்னுடைய கனவாக ஆக்கி கொண்டவர் இளைஞர் சம்பத். ஓவியம் மீது அளவுக்கு அதிகமாக ஈர்ப்பு இருந்தாலும், தன்னுடைய அம்மா அப்பாவிற்காக விலங்கியல் பாடப்பிரிவை தேர்தெடுத்து படித்தார். காரணம் இந்த பாடப்பிரிவில் அதிகமாக படம் வரையலாம் என்பதால்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அவர் படிப்பிற்கேற்ற நிறைய வேலைகள் செய்ய வாய்ப்பு தேடி வந்த போதிலும், ஓவியராக ஆக வேண்டும் என்பது தான் இவருடைய நோக்கமாக இருந்தது.
தன்னுடைய ஆசையயை பெற்றோர்களிடம் கூறியபோது, அவர்களும் இவருக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், முறையாக ஓவியம் கற்க கலைக்கல்லூரியில் சேர சொல்லி முறையாக ஓவியம் கற்று கொள்ளுமாறு கூறினார்.

இப்படி பல்வேறு தடம் மாறும் நிலைகள் வந்த போதிலும், தன்னுடைய கனவான ஓவியத்தை பயின்ற சம்பத், தன்னுடைய திறமைகளை நிரூபிக்கும் விதமாக பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.
மேலும் இவருடைய திறமை தற்போது திரைத்துறையில் மிளிர செய்கிறது , சதுரங்க வேட்டை, பப்பரப்பா, மற்றும் தீரன் ஆகிய படங்களில் ஆர்ட் டிசைன் வேலைகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

அவர் வரைந்த படங்களை காட்டி சாதாரணமாக சிரித்த அவரிடம், உங்களுக்கு பிடித்த ஆர்ட் டைரக்டர் யார் என கேட்ட போது, சாபு சிரல் என்றும் அவர் ஆர்ட் டிசைன் செய்திருந்த கன்னத்தில் முத்தம்மிட்டால், எந்திரன், பாகுபலி படங்கள் தன்னை மேலும் இந்த துறையில் செதுக்கியுள்ளது என கூறினார்.

தற்போது வாட்டர் பெயிண்ட்டிங், ஆயில் பைண்டிங், அக்கர்லிக், டிஜிட்டல் பெயிண்ட்டிங் , என பலவற்றிலும் கலக்கி கொண்டிருக்கிறார் சம்பத்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய ஆசையை மட்டுமே மூலதனமாக வைத்து, திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்கும் சம்பத் இந்த துறையில் சாதிக்க நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.
