padmavathi triler beet the bahubali

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. 

இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்து விட்டு பாகுபலி இயக்குநர் ராஜமௌலி உட்பட பல்வேறு பிரபலங்கள் பத்மாவதி படத்தின் பிரமாண்டம் குறித்து ட்விட்டரில் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் இந்த ட்ரைலரை வலைத்தளத்தில் மட்டும் ஒரே நாளில் 15 மில்லியன் (1.5 கோடி) பேர் பார்த்துள்ளனர்.

பாலிவுட் வரலாற்றில் 24 மணி நேரத்தில் இதுவே அதிகபட்சமாக பார்க்கப்பட்ட ட்ரைலர் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் வரவேற்பைப் பார்த்து நடிகர் ரன்வீர் சிங் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். அதே போல் நடிகை தீபிகா படுகோனும் தன்னுடைய நன்றிகளை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள படக்குழு, படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையாக முடிவடைந்துவிடும் என்றும், படம் நவம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.