padmavathi film no release in dec 1

தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்கள் காரணமாக, சர்ச்சைக்குரிய ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டிசம்பர் 1-ல்...

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போராட்டம் நீடிப்பு

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் பத்மாவதி படத்துக்கு ராஜபுத்திர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர்.

பல்வேறு பகுதிகளில் போராட்டம் நீடித்த நிலையில் அப்படத்தில் நடித்த தீபிகா படுகோனேவிற்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

தேதி ஒத்திவைப்பு

இந்த நிலையில் பத்மாவதி படத்தை திரையிட ராஜஸ்தான், உத்தர பிரதேச அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பல்வேறு நிலையில் எதிர்ப்பு எழுந்து இருப்பதால் திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வருமா? என்ற கேள்வி வலுத்தது.

இப்போது ‘பத்மாவதி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’, டிசம்பர் 1-ந்தேதி வெளியாக இருந்த பத்மாவதி படத்தை வெளியிடும் தேதியை ஒத்திவைத்து உள்ளது.

‘தானாக முன்வந்து...

"தானாக முன்வந்து" இம்முடிவை எடுத்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சட்ட விதிகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், படத்தை வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.

வசுந்தரா ராஜே வலியுறுத்தல்

தேவையான திருத்தங்களை செய்த பின்னரே ‘பத்மாவதி’ படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில பா.ஜனதா முதல்-மந்திரி வசுந்தரா ராஜே மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.