pabas tatoo

நடிகர் பிரபாஸுக்கு முதலில் தெலுங்கு ரசிகைகள்தான் பலர் இருந்தனர். அவர் நடித்த பாகுபலி திரைப்படம் வெளியான பிறகு, கோலிவுட்டிலும் ரசிகர்கள் பலர் உருவாகிவிட்டனர்.

தற்போது இவருடைய தீவிர ரசிகை ஒருவர், பிரபாஸின் முகத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பாகுபலி 2 படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, ஒரு முறை பிரபாஸ் தனக்கு இந்தப் படத்தின் ரிலீசுக்குப் பின் 6000 வரன்கள் வந்ததாகவும். பெண்கள் பலர் தன்னைக் காதலிப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.