மத்திய அரசு மக்களின் அசலான பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் இந்தியை திணிப்பதில் கவனம் செலுத்துவதாக அமித் ஷா மீது அதிருப்தி அடைந்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். 

நாடு முழுவதும் இந்தியை ஒரே மொழியாக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

 

இது குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், ‘’இந்தியா போன்ற பல மொழிவழி தேசிய இனங்களை கொண்ட நாட்டில், ஒற்றை மொழியை திணிப்பது என்பது ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இல.நடராசன், தாளமுத்துகளின் ஈகத்தை தமிழகம் மறக்காது. இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது. 

 

நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றை இந்தி மொழியை திணிப்பது என்பது மக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் செயலாகும். மத்திய அரசு மக்களின் அசலான பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.