Pa Ranjith reveals Next movie with Vijay
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ராதா ரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தீபாவளிக்கு இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் பா.ரஞ்சித்துடன் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. திரை பிரபலம் ஒருவர் பா.ரஞ்சித்துடன் இணைந்து நடிக்க தயாரா? என கேட்டுள்ளார். அதற்கு தளபதி விஜய் ஆமாண்ணே நான் கூட “கபாலி” படத்தை பார்த்தேன்.
நல்ல கதையை ரெடி பண்ண சொல்லுங்க, நடிக்க நான் தயார் என கூறியுள்ளார். இதனால் பா.ரஞ்சித்தும் விஜய்க்காக கதையை உருவாக்கும் வேளையில் ஈடுபட்டாராம். பின்னர் சூப்பர் ஸ்டார் மீண்டும் காலா படத்திற்கான வாய்ப்பை தரவே சூப்பர் ஸ்டாரை இயக்கும் பணியில் இறங்கி விட்டார்.
இதனால் பா.ரஞ்சித் விஜய்க்கு பிடித்த மாதிரி கதையை உருவாக்கி விட்டால் இவர்களின் கூட்டணி உறுதியாகி விடும். ரஞ்சித் விஜய் கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும் ரசிகர்களே?
நிச்சயம் இயக்குனர் ரஞ்சித் தயார் செய்யும் கதை விஜயின் அரசியலுக்கு முழுக்க முழுக்க ஒரு அச்சாரமாக அமையும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசபடுகிறது
