Asianet News TamilAsianet News Tamil

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் படத்தின் டைட்டில் வெளியானது!

இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்தடுத்து பல அறிமுக இயக்குனர் படங்களை தயாரித்து வரும் நிலையில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், பா ரஞ்சித் தயாரிக்க உள்ள படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

pa ranjith produced next movie title announced
Author
First Published Feb 7, 2023, 4:26 PM IST

'அட்டகத்தி' படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமாகி... 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கிய முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் பா.ரஞ்சித். சமீப காலமாக சில படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். திறமை இருந்தும், படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வரும் பல இளம் இயக்குனர்களின் கனவை தன்னுடைய நீலம் புரொடக்ஷன் மூலம் நிறைவேற்றி வருகிறார் பா.ரஞ்சித்.

இவர் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தது.

pa ranjith produced next movie title announced

மேலும் ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை ஏற்கனவே இயக்கிய 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை தொடர்ந்து, மீண்டும்  'தண்டகாரண்யம்' என்னும் படத்தை இயக்க உள்ளதாக, இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட அறிவித்துள்ளனர்.

கையில் குழந்தையோடு ஷாருகான்..! அட இது அட்லீ - பிரியா தம்பதியின் மகனா? வைரலாகும் புகைப்படம்..!

pa ranjith produced next movie title announced

இந்த படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முதல்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகே 62வில் இருந்து நீக்கம்.. சைலண்டாக சம்பவம் செய்ய தயாராகும் விக்னேஷ் சிவன் - விக்கியின் அடுத்த பிளான் இதுவா?

Follow Us:
Download App:
  • android
  • ios