புதுச்சேரி கம்பன் கலை அரங்கம் சார்பில் நடைபெற்ற கம்பன் விழாவில், பிரபல பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு கம்பன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில், வருடம் தோறும் நடைபெறும் கம்பன் விழா நேற்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.  இதில் பிரபல பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு கம்பன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பின் பேசிய,  பி.சுசிலா  இந்த விருதினை ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார். தெலுங்கு பெண்ணான தனக்கு தமிழில் சரளமாக பேச தெரியாது, பாட மட்டும் தான் தெரியும். பல தமிழறிஞர்கள் முன்பு இவ்விருதை வாங்குவது மகிழ்ச்சி என்றும்,  இவ்விருதினை பெற்றதற்கு கடவுளுக்கு  நன்றி செலுத்துவதாக கூறினார். 

சாரீரம் கடவுள் கொடுத்தது, சரீரம் பெற்றோர் கொடுத்தது என கவித்துவமாக பேசி, கடைசியில் பாடல் ஒன்றையும் பாடி தன்னுடைய உரையை முடித்தார்.