அமலா பாலின் நிர்வாணக் காட்சிகளுக்குப் பிராயச்சித்தமாகவோ என்னவோ ‘ஆடை’படத்தில் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாவை வைத்து ஒரு பக்திப்பரவசமான பாடலைப் பாடவைத்திருக்கிறார் அப்பட இயக்குநர் ரத்னகுமார்.

‘90 எல்.எல்’,’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’படங்களை அடுத்து அமலா பாலின் நிர்வாணக் காட்சிகள் மற்றும் படம் குறித்த சில விவகாரமான தகவல்களுக்காகவே பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது ஆடை’படம். ‘மேயாத மான்’படத்தையடுத்து ரத்னகுமார் இயக்கியுள்ள இப்படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரத்னக்குமார் ஒரு அதிர்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...தனது 83 வது வயதில் பி.சுசீலா அம்மா எங்கள் ‘ஆடை’படத்துக்காக ஒரு பக்திப்பாடலைப் பாடியுள்ளார். சுமார் 70 ஆண்டுகளுக்கு அவர் பாடிய அதே பாடலை இன்று எங்கள் படத்துக்காக அவர் பாடியுள்ளார். இதை எங்கள் படக்குழு கடவுளின் ஆசிர்வாதமாகவே எடுத்துக்கொள்கிறது’என்று பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக இயக்குநர் ரத்னக்குமாரின் தீவிர ரசிகையாக மாறியுள்ள அமலாபால் அப்பதிவை ரீட்விட் செய்து ‘ஆசிர்வதிக்கப்பட்டோம்.ஆசிர்வதிக்கப்பட்டோம்...ஆசிர்வதிக்கப்பட்டோம்...’என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.