Oviyas next is titled 90 ML Simbu to compose music

சிம்பு, ஓவியா முதன்முறையாக இணைந்து பணியாற்றும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் புகழுக்குப் பின் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடிவந்தாலும் சரியான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கவிருக்கிறார் ஓவியா. முதலில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் “காஞ்னா-3” படத்தில் நடித்துவரும் அவர் சற்குணம் இயக்கும் கலைவாணி படத்தின் இரண்டாம் பாகமான கே-2 படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தைத் தொடர்ந்து இசையமைக்கிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தற்போது அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோரைத் தொடரந்து ஓவியா கதாநாயகியை மையமாகக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். குளிர் 100 டிகிரி படத்தை இயக்கிய அனிதா உதீப் “90 எம்.எல்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அனிதா நேற்று (பிப்ரவரி 14) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் டீக்கடையில் அமர்ந்து டீயும் பன்னும் சாப்பிடும் ஓவியாவை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.