நடிகை ஓவியா திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட, பிக் பாஸ் என்கிற தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவருக்கு இத்தனை கோடி ரசிகர்கள் உருவாக காரணம் இவரின் நல்ல உள்ளமும், இவரின் செயல்களும் தான்.

இந்நிலையில் ஓவியா நீண்ட இடைவேளைக்கு பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு ட்விட் போட்டுள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள்  24 மணிநேரத்திற்குள் 49000 பேர் லைக் செய்திருந்தனர், மேலும் 14000 பேர் ரீட்வீட், 8500 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.

இவருக்கு இருக்கும் வரவேற்பை கண்டு தமிழ் மற்றும் மலையாள முன்னணி நடிகைகள் பலர் ஆச்சர்யத்தில் உள்ளார்களாம்.