oviya try to talk julee

ஓவியா தன் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்று நிரூபித்து, மற்றவர்கள் கண்களுக்கு நல்லவளாக தெரிந்தாலும், ஜூலியின் பொய் முகம் வெளிப்பட்டதால் அனைவர் முன்னிலையிலும் அவர் நேற்று அசிங்கப்பட்டு போனார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் ஜூலியை உண்மையான தோழியாக பார்க்கும் ஓவியா, அவரிடம் சென்று பேச முயற்சிக்கிறார்.

ஆனால் ஜூலி மிகவும் திமிராக ஓவியாவை அசிங்கப்படுத்தும் விதத்தில் பேசாமல் அந்த இடத்தை விட்டு போகிறார். அவர் பின்னால் சென்று "ஜூலி பொய் மேல் பொய் சொல்லாதே மக்கள் காரித்துப்புவாங்க" என்று அறிவுரை கூறுகிறார்.

குத்தம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதற்கு ஏற்ப ஓவியா இருக்கும் எந்த ஒரு இடத்திலும் இல்லாமல் அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார் ஜூலி... மேலும் காயத்ரி இனி உனக்கும் அவளுக்கும் எதுவும் இல்லை. முடிச்சிப்போச்சி என வக்காலத்து வாங்கி சண்டை போடும் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.