பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஓட்டு மொத்த பெண்களும், ஓவியாவை எதிரியாக பார்க்கின்றனர். காரணம் அவர் யார் பேச்சையும் கேட்பதில்லை  என்றும் எந்த ஒரு வேலையும் செய்வதில்லை என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் அனைவரையும் குழப்பி விடுவதாகவும் கூறி நமிதாவும், காயத்ரியும் ஓவியாமேல் கோபத்தை காட்டுகின்றனர். ஆனால் இதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாத ஓவியா, யாரையும் பற்றி குறை  சொல்லாமல் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்து வருகிறார்.

நேற்று நள்ளிரவு வரை ஓவியாவை தூங்க விட கூடாது என முடிவு செய்த நமிதா, காயத்ரி, ஜூலி, மற்றும் ரைசா ஆகியோர் பாடல் பாடியும், அவரை வெறுப்பேற்றுவது போல் டார்ச்சர் செய்ததால். ஓவியா பிக் பாஸ் குடும்பத்தின் தலைவர் சக்தியை சந்திக்க போகிறார். 

ஓவியாவை சமாதானம் செய்து ஆரவும், சினேகனும் எதுவாக இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம் இப்போது இங்கு படுத்துக்கொள் என்று கூறுகின்றனர். அப்போது சினேகன் மீது சாதாரணமாக படுக்கும் ஓவியாவை பார்த்து, ஜூலி அக்கா அவ அண்ணன் மேல படுத்துருக்கா... எனக்கு கோபம் வருது என கூறி வயிற்றெரிச்சல் படுகிறார்.

மேலும் சினேகன் அண்ணனின், இமேஜ் கெட்டு போய் விடும் என்றும் கூறி அலறுகிறார். ஆனால் இவர் அண்ணன்.. அண்ணன்.. என்று கூறி சினேகனை கட்டிபிடித்தது தான் ஆபாசமாக தெரிந்ததே தவிர, ஓவியா சினேகன் மடியில் தூங்கியது ஒரு குழந்தை தூங்குவது போல் தான் இருந்தது ஆபாசமாக தெரியவில்லை என்று ஜூலியை திட்டி தங்களுடைய ஆதரவை ஓவியாவுக்கு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.