oviya sing new year song for simbu music

நடிகை ஓவியா தற்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னி என்று சொல்லும் அளவிற்கு பேவரைட் நடிகையாகி விட்டார். மேலும் இவருக்கு பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் என பலதரப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். 

இதனால் இவர் எது செய்தாலும் அது பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் இந்த வருட புத்தாண்டை வரவேற்கும் விதத்தில், நடிகர் சிம்புவின் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே... நிறுத்து நிறுத்து நிறுத்து எத்தன நாள் தான் நியூ இயர்க்கு இதே பாட்டு... எனக்கு புது பாட்டு வேணும் என கூறி ஓவியா இந்தப் பாடலை பாடத் துவங்குகிறார். நியூ இயர் நைட்டு... ஆகலாமா டைட்டு... என்றும், இனிய தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலீஷ் எல்லா உலக மக்களே 'Wish you happy new year' LET... GET...மரண மட்ட... என்ற வார்த்தைகளைக் கூறிய பின்.. 

'நியூ இயர் நைட்டு ஆகலாமா டைட்டு... இன்னைக்கு நைட்டு எல்லாமே ரைட்டு... என்று துவங்கும் பாடலைப் பாட துவங்குகிறார் ஓவியா, நியூ இயர் ஸ்பெஷலாக ஓவியா சிம்புவின் இசையில் பாடியுள்ள. இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

மேலும் சிம்பு இசையில் தற்போது வெளியாகியுள்ள படமான 'சக்க போடு போடு ராஜா' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடல் இதோ

Scroll to load tweet…